
ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் இதுவே-
“ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராமா ராமா ஹரே ஹரே”.
“கிருஷ்ணா” நம் அம்மாள் ராதாராணியின் கணவன், நம் அப்பார். “ராமா” நம் அம்மாளின் கணவனின் அண்ணன், நம் பெரியப்பார். “ஹரே” நம் அம்மாள் ராதாராணியின் ஒரு பெயர்.
நாம் இந்த மந்திரத்தை சொல்லும் போது, முதற்பாகத்தில் நாம் நம் அம்மாளுடனும் அப்பாருடனும் இருக்கின்றோம். இரண்டாம் பாகத்தில் நாம் நம் அம்மாளுடனும் பெரியப்பாருடனும் உள்ளோம்.
கிருஷ்ணருடன் இருக்கும் பொழுது அம்மாள் உனக்கு பிடித்ததைச் செய்து உன்னை கண்டு மகிழச் செய்வாள்.
ராமருடன் இருப்பின் அம்மாள் உனக்கு பிடித்ததைச் செய்யச் சொல்லி உன்னை கண்டு மகிழ்வாள்.
“ஹரே கிருஷ்ணா” என்றால் அம்மாள் அப்பார் இருவரும் நம்முடன் உள்ளனர் என்று பொருள். “ஹரே ராமா” என்றால் அம்மாள் பெரியப்பார் இருவரும் நம்முடன் உள்ளனர் என்றே பொருள்.
“கிருஷ்ணா கிருஷ்ணா” என்னும் பொழுது நாம் நம் அப்பாருடன் விழையாடுகிறோம் என்று அர்த்தம். “ராமா ராமா” என்னும் பொழுது நாம் நம் பெரியப்பாருடன் விழையாடுகிறோம் என்று அர்த்தம். “ஹரே ஹரே” என்பது நம் அம்மாள் முழுவதுமாக நம்முடன் மட்டுமே இருக்கின்றாள் என்று அர்த்தம்.